ஆட்சேபனைக்குரிய கருத்தை வெளியிட்டார் என்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்ணையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எந்த ஒரு தவறையும் சட்டத்தின் வழியாகவும், ஜனநாயக வழி முறைகளிலுமே எதிர்கொள்ள வேண்டும். அதுவே சரியான தீர்வை பெற்றுத் தரும். இதற்கு மாற்றமான வழிமுறைகள் யாவும் நீடித்த சச்சரவுகளையும், பேரழிவுகளையுமே ஏற்படுத்தும். வெறுப்பு அரசியலும், காவி மதவாதமும் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள், வெவ்வேறு புதிய வடிவங்களில் நாட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவது மிகவும் கவலையளிக்கிறது. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்கு ,சட்டத்தின் துணை கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம், அடுத்தடுத்த விபரீதங்களை தடுக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ராஜஸ்தானில் அமைதியை ஏற்படுத்திட சகல தரப்பும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 29.06.2022
Month:
சிதம்பரத்தில் பொதுக்கூட்டம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
ஜூன்;29., வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்திய நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் CJAF கூட்டமைப்பு சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் K.S.அழகிரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் பிரமுகர் இதாயத்துல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் உரையாற்றினர். இதில் பொதுச் செயலாளர் அவர்களோடு , மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் . தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை. முபாரக், கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரபீக், இக்பால், தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாநில பொருளாளர் அமீது ஜெகபர், ஒன்றிய செயலாளர் ஹாஜா மெய்தீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 28.06.2022
நாச்சிக்குளத்தில்… செப்10 தலைமை செயலாக முற்றுகை போராட்ட சுவர் விளம்பரம் பணிகள் தீவிரம்…
10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. போராட்ட அழைப்பு சுவர் விளம்பரம் பணிகள் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் பரவலாக எழுதப்பட்டு வருகிறது. #ReleaseLongTermPrisonerS
செப் 10 முற்றுகை முன்னோட்டம்… சிதம்பரத்தில் எழுச்சிமிகு இருசக்கர வாகன அணிவகுப்பு! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
ஜூன்:28, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் எங்கும் ஆயத்த ஏற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் எழுச்சிமிகு இரு சக்கர வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று 4 இடங்களில் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்தார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜீதீன், மாநிலச் செயலாளர் நாகை. முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர். நகரின் பிரதான சாலைகளில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மஜக கொடிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் இளைஞர்கள் முழக்கங்களுடன் அணிவகுத்தனர் வழியெங்கும் பொதுமக்கள் கையசைத்து அணிவகுப்பை உற்சாகப்படுத்தினர். இது செப் 10, தலைமைச் செயலக முற்றுகைக்கு முன்னோட்ட அணிவகுப்பாக அமைந்தது என பலரும் கூறினர். இதில் மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹூசைன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், இக்பால், மாவட்ட இளைஞரணி நைனா, MJTS மாவட்ட செயலாளர் பாஷா, மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் முஸரப், பைசல், பாருக், சதகத்துல்லாஹ், ஒன்றிய செயலாளர் ஹாஜா
லால்பேட்டை சந்திப்புகள்.. மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!
ஜூன்:28, கடலூர் மாவட்டம் லால்பேட்டைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று வருகை தந்து கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் வருகை தந்தனர். பிறகு காலம் சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை தலைவர் தளபதி ஷபிக்குர் ரஹ்மான் மற்றும் ஜமாத்துல் உலமா முன்னாள் தலைவர் மவ்லவி அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் ஆகியோர் இல்லம் சென்று அவர்களின் மறைவுக்காக குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இரண்டு தலைவர்களின் நட்பையும், அவர்கள் மஜக மீது கொண்டிருந்த மரியாதையையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர், லால்பேட்டை பேரூர் கவுன்சிலர் OR ஜாகிர் ஹுசைன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, அமீரக துணை செயலாளர் S.A.தையூப், துபை மாநகர பொருளாளர் பயாஜ், துபை மாநகர முன்னாள் செயலாளர் ஷபிக்குர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், பொருளாளர் நூர், நிர்வாகிகள் ஜாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_கடலூர்_மாவட்டம் 28.06.2022