முத்துப்பேட்டை அல்மஹா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா..!! மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்..!!

ஜூன்:26..,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இயங்கிவரும் அல்மஹா அறக்கட்டளையின் பெண்கள் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவும் TVS கார்கோ & டிராவல்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிகளை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு விழாவும் மேலும் சிந்தனையைத் தூண்டும் வாழ்வியல் நிஜங்கள் என்ற புத்த வெளியீட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு, A.X.அலெக்ஸாண்டர் IPS அவர்களும், திருக்குறள் ஆய்வு கழக நிறுவனர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா M.A.,M.Ed.,Ph.D., அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

TVS ஹைதர் அவர்கள் மாணவிகளுக்கு பட்டங்களையும், ஊழியர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி சிந்தனையைத் தூண்டும் வாழ்வியல் நிஜங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார்

புத்தகத்தின் முதல் பிரதியை முத்துப்பேட்டை புதுப்பள்ளி பெண்கள் மதரஸா முதல்வர் A.இப்ராஹிம் அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

முன்னதாக அல்மஹா குரூப் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் வணிகர்
சங்க மாவட்ட செயலாளர் நாச்சிக்குளம் ஜான் முகம்மது, முத்துப்பேட்டை பேருராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் மற்றும் பல்வேறு சமுக அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WINGS
#திருவாரூர்_மாவட்டம்.
25.06.2022