நுபுர் சர்மாவை கைது செய்! அரியலூரில் அனைத்து கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்! மஜக தலைமை கழக பேச்சாளர் காதர் பாஷா கண்டன உரை நிகழ்த்தினார்!

ஜூன்:27.,

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகிகள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி அரியலூரில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை கழக பேச்சாளர் காதர் பாஷா, அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் மாவட்ட செயலாளர் அக்பர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முகமது அலி, ஷேக் இஸ்மாயில், சையது அலி, மாவட்ட பொருளாளர் ஷர்புதீன், வணிகர் அணி மாவட்ட செயலாளர் செய்யது பாருக்,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல் ராஷித், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், ஒன்றிய செயலாளர் யாஹீன் கான்,நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#அரியலூர்_மாவட்டம்
25.06.2022