தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்! மே.27., உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று தேறி வரும் மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, ஆகியோர் களப்பால் கிராமத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் களப்பணிக்கு திரும்ப ஆர்வமுடன் உள்ளதாகவும் கூறினார். அப்போது நாச்சிக்குளம் . ஜான் அவர்களும் உடனிருந்தார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 26.05.2022
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக M.ரஷீத் த/பெ; முஹம்மத் 7/83 மேபீல்ட், நெல்லாக்கோட்டை, கூடலூர், நீலகிரி. அலைபேசி; 96557 98971 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24/05/2022
10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி….
திட்டச்சேரி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து மஜக கவுன்சிலர் ரியாஸ் வெளிநடப்பு..!
நாகை.மே.20., பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்புறங்களில் உள்ள குடியிருப்பு, வணிக கட்டிடங்கள் மற்றும் காலிமனைகளுக்கான சொத்துவரியினை 25% முதல் 100% வரை தமிழ்நாடு அரசு உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த அதே விகிதத்தில் வரி உயர்வை இறுதிசெய்து மன்ற அனுமதிக்காக இன்று (20/05/2022) திட்டச்சேரி பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மஜக கவுன்சிலர் செய்யது ரியாசுதீன் "ஒரேடியாக இவ்வளவு சதவீத வரி உயர்வு என்பது மக்களை பெரிதும் பாதிக்கும். அரசு இந்த வரிஉயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என தான் எழுத்துபூர்வமாக மனு அளித்ததை சுட்டிகாட்டினார். அதேபோல் "வரி உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பெற பத்திரிக்கை வாயிலாக அறிவிப்பு செய்து 30 நாட்கள் (மே 13 வரை) அவகாசம் கொடுத்ததாகவும், அதில் ஒரு மனு மட்டும் பெறப்பட்டு அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு மனுவும் கவுன்சிலரான நான் கொடுத்தது தான். பொதுமக்களுக்கு இதுதொடர்பான செய்தி சென்றடையவில்லை. காரணம் தாங்கள் அளித்த பத்திரிக்கை அறிவிப்பு பிரதான நாளேடுகளில் இல்லாமல், மக்களுக்கு அதிக பரிச்சயம் இல்லாத நாளேடுகளில் அறிவிப்பு வந்துள்ளது, அதேபோல் பேரூராட்சி பொது
மஜக 14வது ஆம்புலன்ஸ் சேவை! ஜெயங்கொண்டத்தில் அர்ப்பணிப்பு..!
மே-20., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 14-வது ஆம்புலன்ஸ் சேவை அர்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அக்பர் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் #சட்டமன்ற_உறுப்பினர் திரு. க.சொ.க. கண்ணன் அவர்களும், நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கோ கருணாநிதி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார். பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்கள் ஆம்புலன்சை அர்ப்பணிக்க, #ஜமாத்_தலைவர் P. முகம்மது ஷரிப் அவர்கள் தலைமையில் ஜமாத்தினர் பெற்றுக்கொண்டனர். அங்கு வருகை புரிந்த முக்கிய பிரமுகர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் துணைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், அவர்களும் மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்களும், மாநில துணை செயலாளர்கள் நெய்வேலி இப்ராஹிம், வல்லம் அஹமத் கபீர், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகம்மது மகரூப் ஆகியோரும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். கொரணா காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தாசில்தார் ஆனந்த், நகராட்சி வருவாய் உதவியாளர் சரஸ்வதி, அன்னை தெரஸா நர்சிங் கல்லூரி தாளாளர் முத்து குமரன் ஆகியோருக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட்டது. எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஷர்புதீன், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது அலி, சையது அலி, ஷேக்