மே.30., வேதாரண்யம் - தோப்புத்துறை பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் பெருகியதால் பல பாதிப்புகள் உருவாகியுள்ளது. மரங்களிலிருந்து பழங்களை,காய்கறிகளை சேதப்படுத்துவது ,பொருட்களை தூக்கி செல்வது, குழந்தைகளை அச்சுறுத்துவது என பல பாதிப்புகள் ஏற்பட்டது சமீபத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் வனத்துறையிடம் இது குறித்து புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறை முதல் கட்டமாக 8 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து சென்றுள்ளது. இவை கோடியக்காட்டில் விடப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இதர குரங்குகளையும் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மஜக வின் சூழலியல் காப்பு முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளன்ர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING, #நாகை_மாவட்டம். 29-05-2022
Month:
செப் 10 முற்றுகை… அதிரையில் தொடங்கியது விளம்பரங்கள்!
மே 30., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் கைதிகளை , பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி கடந்த ஜனவரி 7 அன்று முதல் கட்டமாக கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 10 அன்று சென்னையில் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கான சுவர் விளம்பர பணிகள் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தொடங்கி உள்ளது. ஒரு வாரத்தில் மாவட்டம் எங்கும் விளம்பர எழுதும் பணிகள் நடைபெற உள்ளது. #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 29.05.2022
மாநில செயலாளர் சீனி முஹம்மது அவர்களை நேரில் சந்தித்து மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது நலம் விசாரித்தார்..!!
சென்னை.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் சீனி முஹம்மது அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து இறைவனின் அருளால் குணம் அடைந்து இல்லம் திரும்பி உள்ளார். அவரை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது சீனி முஹம்மது அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளும், என்னுடன் சேர்ந்து சமுதாய பணியாற்றிய மக்களின் பிரார்த்தனையாலும் எனது உடல் நலம் பெற்று வந்துள்ளேன் நானும் அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று நெகிழ்வுடன் கூறினார். இச்சந்திப்பில் வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் சாகுல் ஹமீது சேட், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, துறைமுகம் சிக்கந்தர், ஆலம், அக்மல், சைதாப்பேட்டை ரபி ஆகியோர் உடன் சென்று உடல் நலம் விசாரித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்
சென்னையில் யூனிக் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழா..! ! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது திறந்து வைத்தார்…!!
சென்னை.மே, 28., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களின் யூனிக் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழா சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது யூனிக் சைக்கிள் கடையை திறந்து வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் காயிதே மில்லத் கல்வி நிறுவனங்களின் தலைவர் தாவூத் மியாகான், தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் நைனார் ராவுத்தர், மஜக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யூம், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜியா, தலைமை செயற்குழு உறுப்பினர் கடாபி, துறைமுகம் சிக்கந்தர், ஆலம், அக்மல், சைதாப்பேட்டை ரபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்_சென்னை_மேற்கு 28.05.2022
நெல்லை மாவட்ட ஆட்சியருடன் மஜக நிர்வாகிகள்_சந்திப்பு!
மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு கையளிப்பு! மே:27., நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் நெல்லை பேருந்து நிலைய பணிகளை விரைவுபடுத்தவும், மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக அந்த பேருந்து நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்றும் மேலும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர். முன்னதாக ஆதிகால இந்தியர்கள் எனும் ஆங்கில புத்தகத்தை மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் கஜா புயல் நிவாரண பணிகளின்போது நாகை மாவட்டத்தில் தான் சிறப்பு அலுவலராக பணியாற்றிய தாகவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரி அவர்களுடன் தான் மிகுந்த நட்பு கொண்டிருப்பதாகவும் நிர்வாகிகளிடம் கூறினார். இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நெல்லை_மாவட்டம் 25.05.2022