மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்களை சந்தித்து நலம் விசாரிப்பு!

தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்!

மே.27., உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று தேறி வரும் மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, ஆகியோர் களப்பால் கிராமத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் களப்பணிக்கு திரும்ப ஆர்வமுடன் உள்ளதாகவும் கூறினார்.

அப்போது நாச்சிக்குளம் . ஜான் அவர்களும் உடனிருந்தார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
26.05.2022