
மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு கையளிப்பு!
மே:27., நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் நெல்லை பேருந்து நிலைய பணிகளை விரைவுபடுத்தவும், மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக அந்த பேருந்து நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்றும் மேலும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.
முன்னதாக ஆதிகால இந்தியர்கள் எனும் ஆங்கில புத்தகத்தை மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாகிகள் வழங்கினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் கஜா புயல் நிவாரண பணிகளின்போது நாகை மாவட்டத்தில் தான் சிறப்பு அலுவலராக பணியாற்றிய தாகவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரி அவர்களுடன் தான் மிகுந்த நட்பு கொண்டிருப்பதாகவும் நிர்வாகிகளிடம் கூறினார்.
இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
25.05.2022