வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் அவர்களின் உடல் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்புடன் இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளான பொது மக்களும் , தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினரும் பங்கேற்றனர். இன்று இரவு அவரது இல்லத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், மாநில துணைச்செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோரும் வருகை தந்து அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது செய்தியாளர்களிடம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கூறியதாவது.. கஞ்சா வினியோக கும்பலுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் , வசீம் அக்ரம் கூலிப்படை மூலம் கொல்லப்பட்டிருக்கிறார். இது தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. காவல்துறை எஞ்சிய குற்றவாளிகளை துரிதமாக கைது செய்ய வேண்டும். ஆரம்பத்தில் வழக்கில் வேகம் காட்டி விட்டு பிறகு நீர்த்துப் போக செய்து விடக் கூடாது. அவர்கள் விரைந்து சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் காவல்துறை தலைவர் திரு.சைலத்திர பாபு அவர்களை சந்தித்து முறையிடுவோம். தமிழக அரசு கஞ்சா வினியோக கும்பலுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கொல்லப்பட்ட வசீம் அக்ரம்
Month:
வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை..!!நல்லடக்கத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய ஜனாசா தொழுகை இன்று (11.09.2021) வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி திடலில் நடைபெற்றது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அவருக்காக பிரார்தித்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரசீது மற்றும் அவைத்தலைவர் S.S.நாசர் உமரி, துணை பொதுச்செயலாளர்கள் சையத் பாருக் அஹ்மத், மண்டலம் ஜெய்னுல் ஆப்தின் ஆகியோர் கலந்து கொண்டனர், ஜனாசா தொழுகைக்கு பின் வசீம் அக்ரம் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்கள். உடன் மாநில துணைச்செயலாளர் அப்சர்சையத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் 11.09.2021
தென்காசியில் மஜக இல்ல திருமண விழா!துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்பு!
தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வடகரை கிளை செயலாளர் செய்யது அலி, அவர்கள் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இதில் மஜக துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் அச்சன் புதூர் பீர்மைதின், மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லா, விவசாய அணி மாவட்ட செயலாளர் அபூபக்கர், அச்சன் புதூர் செயலாளர் முஹம்மது நாசர், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தென்காசி_மாவட்டம் 09-09-2021.
CAAவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நன்றி!
தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ஒன்றிய அரசின் CAA குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து அதை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். அவரது துணிச்சலான இந்த முடிவை பாராட்டி மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. கடந்த தேர்தலுக்கு முன்பாக நாங்கள் அறிவாலயத்தில் தளபதி அவர்களை சந்தித்தப் போது, நாங்கள் கையளித்த ஐந்து அம்ச கோரிக்கைகளில் இது முதன்மையானது. அந்த வகையில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய CAA-வுக்கு எதிரான தீர்மானத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுத்துரைத்துள்ள கருத்துகள் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரைகளாகும். ஈழத் தமிழர்களையும், அண்டை நாட்டு முஸ்லிம்களையும், நேபாள கிரித்தவர்களையும் புறக்கணித்து, மத பாகுபாடு மூலம் இந்தியாவின் பாராம்பர்ய கண்ணியத்தை சீர்குலைக்கும் இச்சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளை எதிரொலிப்பதாக இருக்கிறது. இத்தீர்மானம் என்பது இச்சட்டத்திற்கு எதிராக இரவு, பகலாக போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்காக போராடிய அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை போராளிகள் அனைவரும் அகமகிழ்ந்துள்ளனர். எனவே எமது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் மீண்டும் ஒரு முறை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு தெரிவித்துக்
மோடி மீதுதான் வழக்கு போட வேண்டும்.. நீதிமன்ற வளாகத்தில் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு, குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கை போராட்டம் ஆகிய வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனி பிரிவுகளில் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் துறைமுக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கெளதமன், இயக்குனர் அமீர், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பேராசிரியை சரஸ்வதி, தோழர் தவசி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் KM.ஷெரிப், தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், தோழர் பொழிலன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா. சுப.வீ உள்ளிட்டோர் வர இயலாமைக்கான அனுமதி பெற்றிருந்தனர். நீதிமன்ற நிகழ்வுக்கு பிறகு முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, இயக்குனர்கள் கெளதமன் மற்றும் அமீர் ஆகியோருடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்