கோவை.ஏப்.03., இன்று கோவையில் தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். அவரோடு அவைத்தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், ஆகியோர் இணைந்து கூட்டுப் பரப்புரை செய்தனர். சிங்காநல்லூர் தொகுதியில் இயக்குனர் கரு.பழனியப்பன், அவர்களும் இணைந்து பொதுச் செயலாளருடன் பரப்புரை மேற்கொண்டார். பொதுச்செயலாளர் பேசும்போது ,மோடியின் படத்தை போட்டு பரப்புரை செய்யாமல் பாஜகவினர் அஞ்சி, அஞ்சி, ஓட்டு கேட்கிறார்கள், மோடியின் படம் போடாமல் பரப்புரை செய்யும் நிலை பாஜகவுக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது, இது தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றியாகும் தமிழர்கள் பாசிஸ்டுகளை ஏற்கவில்லை. அவர்கள் ஓரணியில் திரண்டு சிந்தாமல், சிதறாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என பேசினார். பாசிஸ்டுகளை எதிர்க்கும் வலிமையான கொள்கை பலம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் இருக்கிறது என்றும், அதனால்தான் மஜக ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மஜக வினர் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் இன்று மூன்று தொகுதிகளில் எழுச்சிமிகு பரப்புரையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது, கோவையில் பொதுச்செயலாளருடன் மூன்று தலைமை நிர்வாகிகள் களமிறங்கி
Month:
வடலூரில் திமுக தலைவர் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு!
ஏப்.03, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குறிஞ்சிப்பாடி, கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வடலூரில் பரப்புரை செய்தார். இந்நிகழ்வில், மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் தலைமையில் மஜகவினர் கொடிகளுடன் கலந்து கொண்டனர். இதில், மஜக நிர்வாகிகள் நெய்வேலி ரியாஸ், OAK நூர் முஹம்மது, பாபர் அலி, நெய்வேலி மன்சூர், ராஜா முஹம்மது, ஆதம் சேட், அசார், சதாம் உள்பட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #மஜக_தேர்தல்_பணிக்குழு, #கடலூர்_மாவட்டம். #MJKitWING #TNElection2021
வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து சுட்டெரிக்கும் வெயிலில் மாபெரும் வாகனப் பிரச்சாரம்..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!
வேலூர்.ஏப்ரல்.03., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் பா.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாநகரம் சார்பில் பல்வேறு கட்ட தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 10:30 மணியளவில் வேலூர் சார்பனமேடு பகுதியில் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு இளைஞர் பட்டாளங்களுடன் வாகனப்பேரணியுடன் கூடிய பிரச்சாரம் நடைபெற்றது, வேலூர் தொகுதிக்குப்பட்ட சார்பனமேடு, சைதாப்பேட்டை, கானாரு, காந்தி ரோடு, கொணவட்டம் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு தெருக்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் உரையாற்றிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் தமிழ்நாட்டின் நிகழ்காலம், எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதையும் மேலும் தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே எடுத்துரைத்தார்.. இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், வர்தக்கர் அணி செயலாளர் பட்டேல்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜகவினர் தீவிர பிரச்சாரம்!
கோவை:ஏப்.03., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், அவர்கள் தலைமையில் குனியமுத்தூர், மைல்கல், போன்ற பகுதிகளில் மஜக வினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் தெற்கு பகுதி, பொறுப்பாளர்கள் மத்திய பகுதி, பொறுப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 03.04.2021
கரம்பக்குடியில் CPM வேட்பாளர் தோழர் சின்னத்துரை பரப்புரை..! மஜக நிர்வாகிகள் பங்கேற்கபு..!!
கறம்பக்குடி.ஏப்.03., #கந்தர்வக்கோட்டை_சட்டமன்ற_தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் #CPM வேட்பாளர் தோழர்.சின்னத்துரை அவர்கள் #அரிவாள்_சுத்தியல்_நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு கறம்பக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது ஜான் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். இவண் : #மஜக_தேர்தல்_பணிக்குழு #கந்தர்வக்கோட்டை_சட்டமன்ற_தொகுதி #MJKitWING