மோடியின் படத்தை போட்டு ஓட்டு கேட்க அஞ்சுகிறார்கள்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி எம் எல் ஏ கோவையில் பரப்புரை!


கோவை.ஏப்.03., இன்று கோவையில் தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

அவரோடு அவைத்தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், ஆகியோர் இணைந்து கூட்டுப் பரப்புரை செய்தனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் இயக்குனர் கரு.பழனியப்பன், அவர்களும் இணைந்து பொதுச் செயலாளருடன் பரப்புரை மேற்கொண்டார்.

பொதுச்செயலாளர் பேசும்போது ,மோடியின் படத்தை போட்டு பரப்புரை செய்யாமல் பாஜகவினர் அஞ்சி, அஞ்சி, ஓட்டு கேட்கிறார்கள், மோடியின் படம் போடாமல் பரப்புரை செய்யும் நிலை பாஜகவுக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது, இது தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றியாகும் தமிழர்கள் பாசிஸ்டுகளை ஏற்கவில்லை. அவர்கள் ஓரணியில் திரண்டு சிந்தாமல், சிதறாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என பேசினார்.

பாசிஸ்டுகளை எதிர்க்கும் வலிமையான கொள்கை பலம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் இருக்கிறது என்றும், அதனால்தான் மஜக ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மஜக வினர் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் இன்று மூன்று தொகுதிகளில் எழுச்சிமிகு பரப்புரையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது,

கோவையில் பொதுச்செயலாளருடன் மூன்று தலைமை நிர்வாகிகள் களமிறங்கி பரப்புரையாற்றியது நகரெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மஜகவின் பரப்புரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பெரும் பலத்தை கொடுத்திருப்பதாக பத்திரிக்கைகள் கூறினர்.

இதில் மாநில துணைச் செயலாளர்கள் கோவை பஷீர், நாகை முபாரக், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், MJTS மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், துணைச் செயலாளர் சம்சுதீன், மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட, பகுதி, கிளைக் கழக, நிர்வாகிகள், மற்றும் அணி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.04.2021