வடலூரில் திமுக தலைவர் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு!


ஏப்.03,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குறிஞ்சிப்பாடி, கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வடலூரில் பரப்புரை செய்தார்.

இந்நிகழ்வில், மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் தலைமையில் மஜகவினர் கொடிகளுடன் கலந்து கொண்டனர்.

இதில், மஜக நிர்வாகிகள் நெய்வேலி ரியாஸ், OAK நூர் முஹம்மது, பாபர் அலி, நெய்வேலி மன்சூர், ராஜா முஹம்மது, ஆதம் சேட், அசார், சதாம் உள்பட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#கடலூர்_மாவட்டம்.
#MJKitWING #TNElection2021