வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து சுட்டெரிக்கும் வெயிலில் மாபெரும் வாகனப் பிரச்சாரம்..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!


வேலூர்.ஏப்ரல்.03.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் பா.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாநகரம் சார்பில் பல்வேறு கட்ட தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை 10:30 மணியளவில் வேலூர் சார்பனமேடு பகுதியில் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு இளைஞர் பட்டாளங்களுடன் வாகனப்பேரணியுடன் கூடிய பிரச்சாரம் நடைபெற்றது,

வேலூர் தொகுதிக்குப்பட்ட சார்பனமேடு, சைதாப்பேட்டை, கானாரு, காந்தி ரோடு, கொணவட்டம் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு தெருக்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் உரையாற்றிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் தமிழ்நாட்டின் நிகழ்காலம், எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதையும் மேலும் தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே எடுத்துரைத்தார்..

இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், வர்தக்கர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சாதிக், குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ், ரஜாக், ஷகில் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#வேலூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
03.04.2021