அதிரையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து வீதிமுனை பிரச்சாரம்! மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்று பரப்புரை!


ஏப்.04,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்களை ஆதரவாக உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு அதிரை மஜக சார்பில் தேர்தல் பரப்புரை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

இப்பரப்புரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்களும், மாவட்ட செயலாளர் சேக் அவர்களும் வாக்கு கேட்டு பேசினர்.

இதில் அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, மு.மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, நகர நிர்வாகிகள் அஷ்ரப், அஹமது அஸ்கர், ஹாஜா மர்ஜூக், திமுக நகர துணைச்செயலாளர் அன்சர்கான் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பட்டுக்கோட்டை_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021