சிவகங்கை.ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மானாமதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி ஆ.தமிழரசி அவர்களை ஆதரித்து இளையான்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் பங்கேற்று, திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து உரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான பா.சிதம்பரம் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில் மஜக சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளையான்குடி நகர நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #tnelections2021 #சிவகங்கை_மாவட்டம் 03.04.2021
Month:
வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று சிறப்புரை..!!
வேலூர்.ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் பா.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து இறுதிகட்ட பிராச்சாரமாக வேலூர் மண்டித்தெரு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று உரையாற்றினார், இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல எனவும் இது திமுகவுக்கும் பாசிசத்திற்கும் இடையே நடைபெறும் யுத்தம் என்பதால் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிடினும் பரவாயில்லை ஆனால் ஒருபோதும் தமிழகத்தில் பாசிசம் வளர்ந்துவிடக்கூடாது என்னும் ஒற்றை நோக்கத்துடன் திமுகவிற்கு நாங்கள் தார்மிக ஆதரவு அளித்ததாகவும், மஜகவினராகிய நாங்கள் தமிழகம் முழுவதும் சூராவளி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியும் வரவேற்பும் கிடைத்துள்ளதாகவும், இம்முறை திமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்றவர், தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று எடுத்துரைத்தார். இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத்,
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பரப்புரை!
கோவை:ஏப்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்கள் கரும்புக்கடை, சந்திப்பில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார். அவருடன் அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் சையது இப்ராஹிம், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், மத்திய பகுதி, பொறுப்பாளர்கள் அனிபா, இப்ராஹிம், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 04.04.2021
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு..! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு.!
சென்னை.…ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.மு.கா.ஸ்டாலின் அவர்கள் ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்வில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச்செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் தலைமையில், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் சலீம், சேப்பாக்கம் பகுதி செயலாளர் தாஜுதீன் உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #TNElections2021 #MJK2021 04.04.2021
வேதையில் திமுக தலைவர் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு!
ஏப்.04, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேதாரண்யம், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வேதாரண்யத்தில் பரப்புரை செய்தார். இந்நிகழ்வில், நான்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக பங்கேற்றனர். இதில், தோப்புத்துறை, நாகப்பட்டினம், திருமருகல், நாகை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் மஜகவினர் கொடிகளுடன் அணிதிரண்டு வருகை தந்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #மஜக_தேர்தல்_பணிக்குழு, #நாகை_மாவட்டம். #MJKitWING #TNElection2021 03.04.2021