மானாமதுரை சட்டமன்ற தொகுதி_வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்..! மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் பங்கேற்பு.!


சிவகங்கை.ஏப்ரல்.04.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மானாமதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி ஆ.தமிழரசி அவர்களை ஆதரித்து இளையான்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் பங்கேற்று, திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து உரையாற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான பா.சிதம்பரம் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மஜக சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளையான்குடி நகர நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#tnelections2021
#சிவகங்கை_மாவட்டம்
03.04.2021