You are here

ஆயிரக்கணக்கானோர் திரண்டு எழுச்சி..! கோவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நிறைவு பரப்புரை..!!


கோவை.ஏப்.04., இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கோட்டைமேட்டில் பொதுச்செயலாளர் உரையைக் கேட்க திரண்டிருந்தனர். கட்டிடங்களில் எல்லாம் நின்று மக்கள் கையசைத்து ஆதரவு தெரிவித்தனர்.

அல்லமா இக்பால் சதுக்கத்தில் 3 முனைகளிலும் மக்கள் திரண்டு அவரது உரையை ஆர்ப்பரித்து கேட்டனர்.

300 அடி தூரத்தில் கமல்ஹாசனும், ராதிகா சரத்குமாரும் பரப்புரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில் பாஜக போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

நிறைவாக முக்கிய வீதிகள் வழியே கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஜீப்பில் இருந்தவாறு அணிவகுப்பு நடை பெற்றது.

நிறைவாக காரியாலயத்தில் பொதுச் செயலாளர் அவர்களை வேட்பாளர் மயூரா S.ஜெயக்குமார் அவர்கள் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து மஜக வின் ராணுவம் போன்ற களப்பணியை வியந்து பாராட்டினார்.

இந்நிகழ்வில் அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் JS.ரிபாயி, துணைச் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் ஆகியோரும் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டர்.

இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.M.ஹாரிஸ், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் சையது இப்ராஹிம், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன் மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.04.2021

Top