கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க இயலாதது என்பதால் இதை வரவேற்கிறோம். அதே சமயம் வழிபாட்டுத்தலங்களுக்கு சில விலக்குகள் தேவை என்பதையும் தமிழக அரசு உணர வேண்டும். வழிபாட்டு மையங்கள் என்பது மக்கள் மன அமைதி பெறும் இறையில்லங்களாக இருப்பதால் அங்கு மக்கள் கட்டுப்பாடுகளுடன் வந்து செல்வதற்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும். கோயில், மசூதி, தேவாலயம் என மக்கள் கூடி பிரார்த்திக்கும் இடங்களில் நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக புனித ரமலான் மாதம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்குவதால், மக்கள் இரவு நேர வழிபாட்டை நடத்தும் வகையில் இரவு 10 மணி வரை மசூதிகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிடலாம். இதை எல்லோரும் பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. இதே போன்று எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஆன்மீக காரணங்களுக்காக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய
Month:
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஜக அலுவலகம் வருகை!! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களுடன் சந்திப்பு!!
கோவை:ஏப்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், மற்றும் மாவட்ட நிர்வாகிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் எம்.பி அவர்கள் மஜக அலுவலகம் வருகை தந்து நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்தும், தொகுதி ரீதியான வாக்குப்பதிவு சதவீதம் என்பது குறித்தும், மற்றும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்தனர். இதில் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் சண்முகசுந்தரம் எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பில் திமுக சார்பில் ஜெய்லா, சாதிக், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர்கள் பைசல் ரகுமான், சதாம், பகுதி செயலாளர் காஜா உசேன், மத்திய தொகுதி பொறுப்பாளர்கள் ஹனிபா, இப்ராஹிம், மற்றும் மாவட்ட, பகுதி, நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 07.04.2021
சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்கள் – மஜக ஆழ்ந்த இரங்கல்.
சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவர்கள் குடும்பத்தினருக்கு #மஜக சார்பில் ஆறுதலை உரித்தாக்குகிறோம். #Chattisgarh #Maoistattack #MjkParty
சிறந்த சமூக செயல்பாட்டாளர் மதுக்கூர் கஃபார்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
தஞ்சை.ஏப்.05.,மமகவின் மதுக்கூர் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சகோ.கஃபார் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக நேற்று உயிரிழந்தார். இன்று காலை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்களும், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் அவர்களும் அவரது இல்லத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். கஃபார் ஒரு நேர்மையான சமூக செயல்பாட்டாளர் எனவும், அவரது இளம் வயது மரணம் வருத்தமளிப்பதாகவும் பொதுச்செயலாளர் அவர்கள் குறிப்பிட்டு அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திப்பதாகவும் கூறினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 05.04.21
ஆயிரக்கணக்கானோர் திரண்டு எழுச்சி..! கோவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நிறைவு பரப்புரை..!!
கோவை.ஏப்.04., இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் கோட்டைமேட்டில் பொதுச்செயலாளர் உரையைக் கேட்க திரண்டிருந்தனர். கட்டிடங்களில் எல்லாம் நின்று மக்கள் கையசைத்து ஆதரவு தெரிவித்தனர். அல்லமா இக்பால் சதுக்கத்தில் 3 முனைகளிலும் மக்கள் திரண்டு அவரது உரையை ஆர்ப்பரித்து கேட்டனர். 300 அடி தூரத்தில் கமல்ஹாசனும், ராதிகா சரத்குமாரும் பரப்புரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் பாஜக போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது. நிறைவாக முக்கிய வீதிகள் வழியே கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஜீப்பில் இருந்தவாறு அணிவகுப்பு நடை பெற்றது. நிறைவாக காரியாலயத்தில் பொதுச் செயலாளர் அவர்களை வேட்பாளர் மயூரா S.ஜெயக்குமார் அவர்கள் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து மஜக வின் ராணுவம் போன்ற களப்பணியை வியந்து பாராட்டினார். இந்நிகழ்வில் அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் JS.ரிபாயி, துணைச் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் ஆகியோரும் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டர். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், கொள்கை விளக்க அணி