சிறந்த சமூக செயல்பாட்டாளர் மதுக்கூர் கஃபார்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


தஞ்சை.ஏப்.05.,மமகவின் மதுக்கூர் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சகோ.கஃபார் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இன்று காலை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்களும், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் அவர்களும் அவரது இல்லத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

கஃபார் ஒரு நேர்மையான சமூக செயல்பாட்டாளர் எனவும், அவரது இளம் வயது மரணம் வருத்தமளிப்பதாகவும் பொதுச்செயலாளர் அவர்கள் குறிப்பிட்டு அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
05.04.21

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*