இன்று சட்டமன்றத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்த போது, "தண்ணீரில் பயிர்கள்... கண்ணீரில் விவசாயிகள்" என்ற பதாகையுடன் தண்ணீரில் மூழ்கி அழுகிய பயிர் கட்டுடன் வருகை தந்தார். நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய அவரது நிகழ்வு அமைந்தது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK2021 #MJKitWING #சட்டப்பேரவை_வளாகம் 04-02-2021
Month:
கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி கூட்டமைப்பு சார்பில் DGPயை சந்தித்து மனு..! மஜக சார்பாக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!
சென்னை.பிப்.03., கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் முகம்மது நபி அவர்கள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் பதட்டமான சூழ்நிலை உருவானதன் காரணமாக தமிழக காவல்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கல்யாணராமனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரியும், மேலும் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வரும் பாசிச பயங்கரவாதிகளை கைது செய்து சிறையில் அடைக்க கோரியும். அவர்களது சமூக வலைதள கணக்குகளை முடக்கக் கோரியும்... அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று தமிழக காவல் துறை தலைவர் திரு.ஜே.கே.திரிபாதி IPS, அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #தலைமையகம் 03-02-2021
பணி நிரந்தரம் செய்யகோரி போராட்டம்..! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆதரவு!
சென்னை.பிப்.03, தமிழ்நாடு பன்னோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்கு சென்று சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவர்களது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கூறினார். அவரின் வருகைக்கும், மஜகவின் ஆதரவிற்கும் போராட்டக்குழு நன்றியை கூறினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 03-02-2021
கும்பகோணத்தை தனி மாவட்டம் கோரி அனைத்து கட்சி தொடர்முழக்க_போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!!
பிப்.03, கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ம.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டம் நேற்று காந்தி பூங்கா அருகில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டார். இதில் மஜக சார்பாக மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் தலைமையில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது இப்ராஹிம், இப்ராஹிம் ஷா, குடந்தை ஒன்றிய செயலாளர் இப்ராஹிம், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது மற்றும் தஜ்மல், ஹசேன் உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மஜக பொதுச் செயலாளரை குடந்தை சுற்றுப்பயணத்தின் போது நேரில் சந்தித்து கும்பகோணத்தை தனி மாவட்ட கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம். 02/02/2021
கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாகை மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் மஜக நிர்வாகிகள் புகார் மனு!!
பிப்.02, அனைத்து சமூக மக்களும் இணக்கமாக வாழ்ந்து வரும் நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டி, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை யார் செய்தாலும் ஏற்க முடியாது. கடந்த 31/01/2021 அன்று கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், கீழையூர், நாகூர், கீழ்வேளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் முதற்கட்டமாக மஜகவினர் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்நிகழ்வில் அந்த, அந்த பகுதிக்குட்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு புகார் மனுக்களை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்