You are here

கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாகை மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் மஜக நிர்வாகிகள் புகார் மனு!!


பிப்.02,

அனைத்து சமூக மக்களும் இணக்கமாக வாழ்ந்து வரும் நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டி, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை யார் செய்தாலும் ஏற்க முடியாது.

கடந்த 31/01/2021 அன்று கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், கீழையூர், நாகூர், கீழ்வேளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் முதற்கட்டமாக மஜகவினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில் அந்த, அந்த பகுதிக்குட்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு புகார் மனுக்களை பதிவு செய்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்

Top