ஜன.26., இந்தியாவின் 72-வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரம் சார்பாக குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டித்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் இப்னு மாஜா, தலைமை வகித்தார் நகர பொருளாளர் மீரான், முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மஜக வின் மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது, அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மஜக வின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், அவர்கள் நேசம் வளர்ப்போம் தேசம் காப்போம் என்ற குடியரசு தின உறுதிமொழி முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், மற்றும் காயல் நகர நிர்வாகிகள் ஜரித் மன்சூர், இர்ஷாத் அலி, பக்கீர்மைதீன், சித்திக், இஸ்மாயில் மற்றும் காஜா உள்ளிட்ட மஜக வினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJKITWING #தூத்துக்குடி_மாவட்டம் 26-01-2021
Month:
சேலத்தில் மஜக சார்பில் 72வது இந்திய குடியரசு தினவிழா! மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா தேசிய கொடியேற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்!
ஜன.26., இந்திய தேசத்தின் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா மாவட்டச்செயலாளர் மஹபூப் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் சர்புதீன், முகமது சபீர், முகமது சுகேல்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் பாபு சாஹின்ஷா, அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். இதில் விவசாய அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஹக்கீம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் பிலால், இளைஞரணி மாவட்ட பொருளாளர் யாசர், மற்றும் பகுதி, நிர்வாகிகள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 26.01.2021
72வது இந்திய குடியரசு தினவிழா! மஜக சார்பில் கன்னியாகுமரியில் தேசிய கொடியேற்று விழா!!
ஜன.26., 72-வது இந்திய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மஜக மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மௌலவி. முகமது கௌஸ் ஆலிம், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர போராட்டங்களில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து உறுப்பினர்களால் மஜகவின் குடியரசு தின கோஷம் முழக்கமிடப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், சாதிக் அலி, மாநகரச் செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணைச் செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர வர்த்தக அணி செயலாளர் செய்யது முஹம்மது, மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷாஜி உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 26-01-2021
கோட்டைப்பட்டினத்தில் ஸ்தம்பித்தது ECR சாலை விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து தேசிய கொடியேந்தி டிராக்டருடன் மஜக மறியல்…! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்டோர் பங்கேற்பு…!
ஜனவரி 26, இன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது போலிசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், வலதுசாரி மதவெறியர்களின் ஊடுறுவலை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்ற இப்போராட்டம் 2 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டு நடந்தேறியது. மஜக விவசாய அணியினர் தேசிய கொடியும், மஜக கொடியும் கட்டப்பட்ட டிராக்டருடன் வந்து சாலையை மறித்தனர். அவர்களுடன் தொண்டர்களும் களத்தில் திரண்டனர். தேசிய கொடிகளையும், மஜக கொடிகளையும் ஏந்தி மஜக வினர் ஆர்ப்பரித்தனர். சற்று நேரத்தில் மூன்று திசைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சாலையோரம் திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அப்பகுதி பரபரப்பானது. மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும், அரச வன்முறைகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு வாழ்த்து கூறியும் எழுப்பப்பட்ட முழக்கங்கள் ECR சாலையை அலற வைத்தது. பிறகு சாலையில் செல்லும் மக்கள் நலன் கருதி 15 நிமிடங்களில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் அவர்கள், பிரதமர் மோடியின் பிடிவாத போக்கை கண்டித்தார். விவசாயிகளின் போராட்ட உணர்வுகளை மதித்து சர்ச்சைக்குரிய
72வது குடியரசு தின மஜக நிகழ்ச்சிகள்..!! மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் நான்கு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி..!! மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி கொடி எற்றி வைத்தார்கள்..!!
சென்னை.ஜன, 26 72 வது இந்திய குடியரசு தினம் மிக எழுச்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக இன்று செவன்வேல்ஸ், பிராட்வே பேருந்து நிலையம் ஒலிம்பிக் அருகில், புளியந்தோப்பு மற்றும் புதுப்பேட்டை ஆகிய நான்கு இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் செவன்வெல்ஸ், பிராட்வே பேருந்து நிலையம் அருகில், புளியந்தோப்பு ஆகிய மூன்று இடங்களில் இந்திய 🇮🇳 தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார், அதன் பிறகு நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் புதுப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள், அதன் பிறகு மாணவர் இந்தியா மாநில பொருளாளர் நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை எழுப்பினார்கள். இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் புதுப்பேட்டை