சென்னை.ஜன, 26
72 வது இந்திய குடியரசு தினம் மிக எழுச்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக இன்று செவன்வேல்ஸ், பிராட்வே பேருந்து நிலையம் ஒலிம்பிக் அருகில், புளியந்தோப்பு மற்றும் புதுப்பேட்டை ஆகிய நான்கு இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் செவன்வெல்ஸ், பிராட்வே பேருந்து நிலையம் அருகில், புளியந்தோப்பு ஆகிய மூன்று இடங்களில் இந்திய 🇮🇳 தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார், அதன் பிறகு நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும், மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் புதுப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள், அதன் பிறகு மாணவர் இந்தியா மாநில பொருளாளர் நேசம் வளர்ப்போம்,
தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் புதுப்பேட்டை யூசுப், துறைமுகம் பகுதி நிர்வாகிகள் அபு, தாஹா, அசன் அலி, திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள் தாஜுதீன், சலீம், எழும்பூர் பகுதி நிர்வாகிகள் 61 வட்டம் பசீர் , ஜப்பார், சாகுல் ஹமீது, இப்ராகிம் , அசன் அலி , குலாப் , சராப், மஸ்தான், 77 வட்ட நிர்வாகிகள் முஹம்மது ஆதம் , முஹம்மது இம்தியாஸ் ,பிரோஸ் , நஸ்ரூதீன் , முஹம்மது முஸ்தபா , கவுஸ் , ஷமி அகமது, அமீன் , பாரூக் , உஸ்மான் , குத்தரத்துல்லாஹ் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு
26.01.2021