ஜனவரி 26,
இன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது போலிசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், வலதுசாரி மதவெறியர்களின் ஊடுறுவலை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்ற இப்போராட்டம் 2 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டு நடந்தேறியது.
மஜக விவசாய அணியினர் தேசிய கொடியும், மஜக கொடியும் கட்டப்பட்ட டிராக்டருடன் வந்து சாலையை மறித்தனர். அவர்களுடன் தொண்டர்களும் களத்தில் திரண்டனர்.
தேசிய கொடிகளையும், மஜக கொடிகளையும் ஏந்தி மஜக வினர் ஆர்ப்பரித்தனர்.
சற்று நேரத்தில் மூன்று திசைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சாலையோரம் திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அப்பகுதி பரபரப்பானது.
மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும், அரச வன்முறைகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு வாழ்த்து கூறியும் எழுப்பப்பட்ட முழக்கங்கள் ECR சாலையை அலற வைத்தது.
பிறகு சாலையில் செல்லும் மக்கள் நலன் கருதி 15 நிமிடங்களில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் அவர்கள், பிரதமர் மோடியின் பிடிவாத போக்கை கண்டித்தார். விவசாயிகளின் போராட்ட உணர்வுகளை மதித்து சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.
மேலும் அமைதியாக அணிவகுத்த விவசாயிகளின் பேரணியில் ஊடுறுவி கலகம் செய்த வலதுசாரி மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
பிறகு காவல்துறையினர் கைது செய்யாததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் குறுகிய நேரத்தில் போராட்டத்தை ஒழுங்குப் படுத்தியிருந்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி,மாவட்ட துணைச் செயலாளர்கள் செய்யது அபுதாகிர், சாஜிதீன், விவசாய அணி மாவட்ட செயலளார் நாகூர் கனி, ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகளும், மஜக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
26.01.2021