சேலத்தில் மஜக சார்பில் 72வது இந்திய குடியரசு தினவிழா! மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா தேசிய கொடியேற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்!


ஜன.26.,

இந்திய தேசத்தின் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா மாவட்டச்செயலாளர் மஹபூப் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் சர்புதீன், முகமது சபீர், முகமது சுகேல்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் பாபு சாஹின்ஷா, அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

இதில் விவசாய அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஹக்கீம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் பிலால், இளைஞரணி மாவட்ட பொருளாளர் யாசர், மற்றும் பகுதி, நிர்வாகிகள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
26.01.2021