72வது இந்திய குடியரசு தினவிழா! மஜக சார்பில் கன்னியாகுமரியில் தேசிய கொடியேற்று விழா!!


ஜன.26.,

72-வது இந்திய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மஜக மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் மௌலவி. முகமது கௌஸ் ஆலிம், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர போராட்டங்களில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

தொடர்ந்து உறுப்பினர்களால் மஜகவின் குடியரசு தின கோஷம் முழக்கமிடப்பட்டது

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், சாதிக் அலி, மாநகரச் செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணைச் செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர வர்த்தக அணி செயலாளர் செய்யது முஹம்மது, மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷாஜி உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
26-01-2021