பிப்.06.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமை மாநாடு குறித்து கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மஜக மாநில பொருளாளரும் மாநாட்டு குழு தலைவருமான எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, மாநாட்டு குழு உறுப்பினர்கள் அவைத்தலைவர் நாசர்உமரி, இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, துணை பொதுச்செயலாளர் சையது அஹமதுபாருக், ஆகியோர் பிப்ரவரி 29ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
06.02.2020