ஓசூரில் மஜக இல்ல மணவிழா: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று வாழ்த்து

பிப்ரவரி.12.,

மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் புதுமடம் அமீன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒசூர் ஹோட்டல் ஹில்ஸ்ல் இனிதே நடைபெற்றது!

மணமக்கள் S.சாலிஹ் அஸ்லம் MBA, மற்றும் S. பஹீமா அம்ரீன், B.sc,
ஆகியோரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஓசூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ Y.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சியின் மேயர் சத்யா, ஓசூர் மாநகராட்சியின் துணை மேயர் ஆனந்தயா, மஜக மாநில துணை செயலாளர்கள ஓசூர் நவ்சாத், புதுக்கோட்டை துரை முகம்மது, ஓசூர் மாநகராட்சியின் பொது சுகாதாரக் குழு தலைவர் என் எஸ் மாதேஸ்வரன் அவர்களும், பி எம் நஞ்சுண்ட சாமி முன்னாள் நகர மன்ற தலைவர் அவர்களும், மஜக மாவட்ட செயலாளர் உமர் மற்றும் மஜக மாவட்ட / நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம்
11.02.2024.