சென்னை.பிப்.07..,
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA, NRC, NPR) கண்டித்து தாம்பரம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஜமாத் தலைவர் M.K. நாகூர்கனி தலைமையில் தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது,
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக ஜீம்ஆ பள்ளியில் இருந்து சன்முகம் சாலை வழியாக சாரை சாரையாக புறப்பட்ட மக்கள் பேரணியாக பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர், ராஜாஜி சாலை அருகில் போலீசாரால் போராட்டகாரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மமக துணை பொதுச்செயலாளர் யாக்கூப், INTJ பொதுச்செயலாளர் சித்திக் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாம்பரம் தாரிக், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தாமதார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், தில்சாத், ஆலந்தூர் சலீம் உள்ளிட்ட மஜக மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கை_வடக்கு
07-02-2020