
சென்னை.25., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நகரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இடத்தேர்வு செய்து அடிக்கல் நாட்டியுள்ளனர்.
புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தேர்வை எதிர்த்து அனைத்து கட்சி, அமைப்புகள், சார்பாக ஒரு கூட்டமைப்பு உருவாகப் பட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டக் குழுவினர் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில்
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.தமிழரசி ரவிக்குமார் அவர்களை சந்தித்து பழைய பேருந்து நிலையத்தையே விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
இச்சந்திப்பில் புதிய பேருந்து நிலைய எதிர்ப்பு குழு தலைவரும், மஜக மாநில துணைச் செயலாளருமான முஹம்மது சைபுல்லாஹ், மனிதநேய வர்த்தகர் சங்க மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், குப்பை சீனி முஹம்மது, துறைமுகம் சிக்கந்தர், அஸ்கர், அம்ஜத், ஜூல்ஃபிகார் அலி, சுல்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
25.04.2022