முன்பு ரஜினி பாரதிராஜா இயக்கத்தில் நடித்தார்.! இப்போது பாரதீயஜனதா இயக்கத்தில்! முதமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!

சென்னை.பிப்.7..,

இன்று சென்னை மண்ணடி மெட்ரோ அருகில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பாஜக-வுக்கு உடன்படும் காரணத்தால், வருமான வரித்துறையின் நெருக்கடிகளிலிருந்து ரஜினிகாந்த் காப்பாற்றப்படுகிறார் என்றும், பாஜக-வுக்கு உடன்படாத காரணத்தினால் நடிகர் விஜய் வருமான வரித்துறையின் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார் என்றும் கூறினார்.

அப்படி தொடர்ந்து நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுத்தால், தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

ரஜினிகாந்த் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு ஆதாரவாக பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், முன்பு ரஜினிகாந்த் பாரதிராஜா படத்தில் நடித்தார், இப்போது பாரதீய ஜனதா இயக்கத்தில் நடிப்பதாக கூறினார்.

அந்தப் படங்கள் ஒடியது என்றவர், இந்த படங்கள் ஓடாது என்றும் கூறினார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம்
07-02-2020

https://m.facebook.com/story.php?story_fbid=2260785704021192&id=700424783390633

Top