You are here

72வது இந்திய குடியரசுதின விழா!காயல்பட்டினத்தில் மஜக மாநில துணைச்செயலாளர் சாகுல்ஹமீது கொடி ஏற்றினார்!!


ஜன.26.,

இந்தியாவின் 72-வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரம் சார்பாக குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காயல்பட்டித்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் இப்னு மாஜா, தலைமை வகித்தார் நகர பொருளாளர் மீரான், முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக
மஜக வின் மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது, அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மஜக வின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், அவர்கள் நேசம் வளர்ப்போம் தேசம் காப்போம் என்ற குடியரசு தின உறுதிமொழி முழக்கங்களை எழுப்பினார்.

இந்நிகழ்வில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், மற்றும் காயல் நகர நிர்வாகிகள் ஜரித் மன்சூர், இர்ஷாத் அலி, பக்கீர்மைதீன், சித்திக், இஸ்மாயில் மற்றும் காஜா உள்ளிட்ட மஜக வினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
26-01-2021

Top