ஜன.29., புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் பெண்கள் குழந்தைகள் என 62 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குடியரசு தினமான 26 ஆம் தேதிய்ன்று அன்று விவசாயிகள் பேரணி நடைபெற்றது விவசாயிகளின் அமைதி பேரணியில் மத்திய மோடி அரசின் காவல் துறை கடும் தாக்குதலை நடத்தியது , தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்தும். மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் VMT. ஜாபர், அவர்கள் தலைமையில் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டின் பிரதான சாலையான பவானி ஆற்றுப் பாலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்ப பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் SN சேட் வரவேற்புரை நிகழ்த்தினார், மாநில செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் M.சுல்தான், முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி மாவட்ட செயலாளர் அசனார், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
Month:
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராடுவோம்! நாகை மஜக ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
ஜனவரி. 28, டெல்லியில் விவசாயிகள் மீது நடைப்பெற்ற அரச வன்முறைகளை கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் நான்கு விவசாய கோரிக்கைகளை முன் வைத்து நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தலைமை தபால் நிலையம் எதிரே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமை ஏற்றார். இதில் மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார். இதில் காவிரி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் தலைவர் காவேரி தனபாலன், மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் நாகை மாலி EX.MLA, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமதாஸ், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிறைவாக பேசிய பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும் போது, விவசாயிகள் 65 நாட்களாக போராடி வருகிறார்கள். இதுவரை 64 விவசாயிகளை
குடியாத்தத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்! மஜக வினர் திரளானோர் பங்கேற்பு!!
வேலூர்.ஜன.28, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் 60நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்,. அதன் தொடர்ச்சியாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று விவசாயிகளின் பேரணி நடைபெற்றது, அப்பேரணியில் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகளில் மத்திய மோடி அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள் இணைந்து குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் IS.முனவ்வர் ஷரிப், குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் மற்றும் கட்சியின் நகர, கிளை நிர்வாகிகளும் திரளாக கலந்துக் கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #வேலூர் மாவட்டம். 28/01/2021
கோவையில் கருணாஸ் MLA அவர்களுடன்_மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
ஜன.27., முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் திரு.கருணாஸ் MLA அவர்கள் தன் சமூகம் சார்ந்த கோரிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பிறகு மஜக நிர்வாகளிடம் பேசிய கருணாஸ் MLA அவர்கள் தமிழகம் முழுவதும் தான் மேற்கொண்டுவரும் யாத்திரைக்கு எல்லா மாவட்டங்களிலும் மஜக-வினர் உற்சாக வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் அரசியல் நிலைப்பாடு குறித்து விரிவாக பேசியவர் மஜக-விற்கும் முக்குலத்தோர் புலிப்படைக்கும் உள்ள உறவு குறித்து மன நெகிழ்ச்சியுடன் பேசினார். இச்சந்திப்பில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், 77வது வார்டு செயலாளர் பயாஸ், ஆகியோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 27.01.2021
திருவாரூரில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மஜக நடத்திய இரயில் மறியல்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!
ஜன.27, டெல்லியில் விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகளில் மத்திய மோடி அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக இரயில் மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலை ரவுண்டானா வழியாக இரயில் நிலையத்தை மஜகவினர் வந்தடைந்தனர். பின்னர் முழக்கங்களை எழுப்பியவாறு கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயிலை மறிக்க முயன்ற மஜக வினர் காவலர்களால் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்து பின்பு விடுவிக்கப்பட்டனர். இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் நாகை முபாரக் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். கண்டன முழக்கங்களை அத்திகடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், கட்டிமேடு ஆதிரெங்கம், நாச்சிகுளம், பாமணி, கொடிக்கால்பாளையம் கிளை செயலாளர்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லா முன்னிலை வகிக்க, மாவட்ட விவசாய அணி செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, கிளை மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.