சென்னை.ஜன.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச்செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #தென்சென்னை_கிழக்கு_மாவட்டம் 29-01-2021
Month:
காந்தி நினைவு நாளை முன்னிட்டு கோவையில் அமைதி புறாக்களை பறக்கவிட்டு மஜக சார்பில். கொடியேற்றம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி கொடியேற்றி வைத்து வாழ்த்துரை!
கோவை:ஜன.30., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதிக்குட்பட்ட செல்வபுரம் 77.78.வது அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா கிளை செயலாளர் பயாஸ், அவர்கள் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது. இதில் மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து இரண்டு இடங்களில் கட்சியின் கொடியேற்றி அமைதிப் புறாவை பறக்க விட்டு நிர்வாகிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, இன்று கொங்கு மண்டலமாம் கோவையில் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து நாம் அனைவரும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகளை இறைவன் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளான் அதற்கு நாம் முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம். கடந்த பிப்ரவரியில் ஒரு எழுச்சி மிக்க மாநாட்டை இந்த கொங்கு மண்டலத்தில் நாம் நடத்தியிருக்கிறோம். கொரோனா நெருக்கடியிலும் எல்லோரும் சோர்வடைந்த நிலையிலும்
காந்தி படுகொலை பத்திரிக்கைப் பதிவுகள்..! நூலாய்வு, மு தமிமுன் அன்சாரி MLA
இன்று ஜனவரி 30. காந்தியாரின் படுகொலை நினைவு நாள் உருக்கமுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் வலதுசாரி மதவெறியர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன், அதே சமயம் , வெளியே துயரம் இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இது பலரும் அறிந்த ஒன்று. காந்தியார் படுகொலை செய்யப்பட்டவுடன் உலகம் எங்கும் கண்டனங்கள் எழுந்தன. உலக் தலைவர்கள் முதல் உள்ளுர் தலைவர்கள் வரை அனைவரும் கண்ணீரையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். உலகப் பத்திரிக்கைகளும், உள்ளுர் பத்திரிக்கைகளும் தலையங்கம் தீட்டி நாதுராம் கோட்சேவின் பயங்கரவாதத்தையும், அவனுக்கு பின்னனியில் இருந்த மதவெறி அமைப்புகளையும் கண்டித்தன. அவற்றின் தொகுப்புதான் "காந்தி படுகொலை- பத்திரிக்கை பதிவுகள்" என்ற ஆவண நூலாகும். போப் ஆண்டவர்,12 வது பயஸ், மெளண்ட்பேட்டன் பிரபு , வின்ஸ்டன்ட் சர்ச்சில், ஆறாம் ஜார்ஜ் மன்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ரவிந்திரநாத் தாகூர், பெரியார், நேரு , , ஜின்னா, காமராஜார், அண்ணா, காயிதே மில்லத், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன், அன்றைய ஐ.நா தலைவர் பெர்னான்ட்வான் என பலரின் கண்ணீர் பதிவுகள் நெஞ்சை உருக்குறது. பாஜகவினரும், வலதுசாரிகளும், கொண்டாடும் சர்தார் வல்லாபாய் பட்டேல் கீழ்கண்டவாறு கதறுகிறார்...." என் மனம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. இச்சம்பவம் வெட்கப்பட வேண்டிய விசயம். அவர் உயிரோடு இருந்தபோதுதான்
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA காணொளி வழியே ஆதரித்து உரை…!
ஜனவரி 29, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை அரசு கல்லூரிகளுக்கான கட்டணமாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி 52 நாட்களாக மாணவ, மாணவிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை ஆதரித்து காணொளி வழியே மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அவர் உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம் என்றும், தமிழகத்தில் மிகப் பெரிய வளாகத்தில் இயங்கும் பல்கலைக்கழகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. 1928 ல் காரைக்குடி ராஜா அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்ட கல்வி கூடம் இது. இதில் முன்னாள் நிதியமைச்சர்கள் நாவலர். நெடுஞ்செழியன், பேரா.க.அன்பழகன், ஐயா நம்மாழ்வார் உட்பட அரசியல் , சமூக செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்கள் என பல ஆளுமைகள் உருவாகியிருக்கிறார்கள். இங்கு MBBS, MD, BDS மாணவ, மாணவிகள் இன்று அரசுக் கல்லூரிக்கான மருத்துவ கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என 52 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகிறார்கள். இதை மனித நேய ஜனநாயக கட்சி ஆதரிக்கிறது. மாணவர் இந்தியாவும் இதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 2013 ல் இதை அரசுடைமையாக்கிய பின்பும் கூட, தனியார் கல்லூரியை விட அதிகமான முறையில்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! நாகை மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின், நாகை மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளராக செய்யது முபாரக், த/பெ; ஹாஜா மொய்தீன், பர்ஹானா ஃபிளாட், மேல கோட்டைவாசல், நாகப்பட்டினம். அலைபேசி; 9025495783 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 29-01-2021