அக்.17, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்டோபர் 17 முதல் டிசம்பர் 31 வரை, 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவிலான இம்முகாமை இன்று தஞ்சை மாவட்டம் பண்டாரவடையில், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். அதை முன்னிட்டு பண்டாரவடை எங்கும் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. மாலை 4 மணி முதல் மழை கொட்டியதால் நிகழ்ச்சியை தொடங்க தாமதமானது. பிறகு மழை தணிந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிலையிலும் திரளானோர் அங்கு கூடினர். உறுப்பினர் சேர்ப்பு தொடக்க விழா அறிமுக பதாகையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, மாநில செயலாளர் ராசுதீன் அதை பெற்றுக் கொண்டார். அப்போது மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா கட்சியின் முழக்கங்களை எழுப்ப அதை அனைவரும் எதிரொலித்தனர். பிறகு வரிசையில் வந்து பலரும் படிவத்தில் கையெழுத்திட்டு, பொதுச் செயலாளரிடம் அடையாள அட்டையை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இவ்வாண்டு குறித்த நேரத்தில் இன்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. மஜகவுக்கும் இது பருவ
Month:
காயல்பட்டினத்தில் மஜக சார்பில் கொடியேற்றம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா!! துணை பொதுச்செயலாளர் தைமியா பங்கேற்பு
தூத்துக்குடி: அக்.17., மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினம் நகரம் சார்பாக கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல் பட்டினம் நகர செயலாளர் இப்னுமாஜா, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜிப் அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச் செயலாளர் தைமியா, அவர்கள் ச கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகள் வினியோகத்தை துவங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் ராசுகுட்டி,காயல் நகர பொருளாளர் மீரான், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப்,நெசவு ஜமாத் தலைவர் ஹாஜி காதர் மைதீன், சமூக ஆர்வலர் அபு, ஆகியோர் மரக்கன்றுகளை வினியோகம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர்கள் அப்துர் ரஹ்மான், சிக்கந்தர் பாஷா, மற்றும் நகர அணி நிர்வாகிகள் ஜரித், மன்சூர், இர்ஷாத் அலி, பக்கீர் மைதீன், சித்திக், உள்ளிட்ட மஜக வினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #காயல்பட்டினம்_நகரம் #தூத்துக்குடி_மாவட்டம் 17-10-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! நெல்லை மாவட்ட துணைச்செயலாளர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின், நெல்லை மாவட்ட துணைச்செயலாளர்களாக, நை.பீர் மைதீன் 217P/27A சாரதாம்பாள் நகர் சங்கர் நகர், தாழையூத்து அலைபேசி; 73394 20488 A1, மைதீன் No. 584/1B, ஞானியார் அப்பா நகர், 3வது தெரு, மேலப்பாளையம் அலைபேசி; 9600964510, 8248703055 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 16-10-2020
மஜக நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம்..! துணை பொதுச்செயலாளர் NA தைமிய்யா பங்கேற்பு.!
நெல்லை அக்.16 மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணை பொதுச்செயலாளர் NA.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் AR.சாகுல் ஹமீது அகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் ஞாயிறு (18-10-2020) அன்று பாளையங்கோட்டையில் (சட்டமன்ற தேர்தல் 2021) குறித்து ஆலோசிக்க கலந்தாய்வு கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா, பாளை பகுதி செயலாளர் சேக் அப்துல் காதர், நகர பொருளாளர் மைதீன்ராஜா, நகர துணைசெயலாளர் ரிபாய், முருகேசன், A1 காயல் மைதீன், அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லைமாவட்டம் 16-10-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, அசரப்(எ)S. சாகுல் ஹமீது ரெத்தினக்கோட்டை அலைபேசி; 9787219713 மாவட்ட துணைச் செயலாளர்களாக, M.கலந்தர் மைதீன் பிராமணவயல் அலைபேசி; 8608139967 P.ஆத்மநாதன் அமரடக்கி அலைபேசி; 9843996364 S.முகம்மது சமீம் கோட்டைப்பட்டினம் அலைபேசி; 9894843407 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 16-10-2020