செப்.24, கொரோணா காரணமாக வேலையிழந்தவர்கள், வெளிநாடுகள், வெளிநகரங்களிலிருந்து தொகுதிக்கு திரும்பியவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த இணைய வழி கருத்தரங்கு நேற்று மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட தொழில் முகமை (DIC) பொது மேலாளர் திரு.P.S. கமல கண்ணன் அவர்களும், மாவட்ட கால்நடைதுறை இணை இயக்குனர் திருமதி. டாக்டர் A.சுமதி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். பிறகு கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான வாய்ப்புகள், சலுகைகள், வங்கி கடன்கள், மானியங்கள் குறித்து விளக்கப்பட்டது. கொரோணா காலத்தில், இம் முயற்சி மக்களையும், அரசு திட்டங்களையும் இணைக்கும் ஒரு முயற்சி என மு.தமிமுன் அன்சாரி MLA கூறினார். இது போன்ற தொடர் காணொளி நிகழ்வுகளை நடத்த உள்ளதாகவும் கூறினார். நிகழ்வுக்கு MLA அவர்களின் தனிச்செயலாளர் நாகை முபாரக் அவர்கள் வரவேற்புரை வழங்க, MLA அலுவலக செயலாளர் சம்பத் குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, இதில் பங்கேற்றவர்கள் கூறினர். தொகுதிக்கு அப்பாற்பட்டு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தொகுதிக்கு தொடர்புடைய வெளிநாடுகளில் வசிப்போரும் இதில் பங்கேற்றனர். அரசு திட்டங்கள் குறித்து மக்களுக்காக MLA அலுவலகம்
Month:
விவசாய மசோதாக்களை எதிர்த்து சுவரொட்டி!! நாகை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டது.
செப். 24, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்கள் சட்டத்தை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் தொகுதிகள் உள்பட நகர் பகுதிகள் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்தன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
வி வி எஸ் எஃப் சி நடத்திய 20ஆம் ஆண்டு கால்பந்து போட்டி…!மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பரிசுகளை வழங்கினார்..!!
சிவகங்கை.செப்.22., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாலிபர் விளையாட்டு சங்கம் சார்பில் 20-ஆம் ஆண்டு கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கால்பந்து அணிகள் கலந்து கொண்டன. இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இப்போட்டியில் காரைக்குடி, பனைக்குளம், குப்பன்வலசை மற்றும் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. 20.9.2020 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பனைக்குளம் அணியும், டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி அணியும் மோதின இப்போட்டியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி அணி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்ற டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி அணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார் இரண்டாம் பரிசு பெற்ற பனைக்குளம் அணியினருக்கு சமூக ஆர்வலர் சித்திக் வெற்றிக் கோப்பையை வழங்கினார். இந்நிகழ்வின் போது மஜக மாவட்டச் செயலாளர் சல்லை ஹாஜா, மருத்துவ சேவை அணி செயலாளர் முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWIING #சிவகங்கை_மாவட்டம் 21-09-2020
மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர்.!ஆகியோரின் இல்லத்திற்கு கருணாஸ் MLA வருகை!!
சிவகங்கை:செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் தாயார் கடந்த 15.09.2020 அன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற கருணாஸ் MLA., அவர்கள் மஜக மாநில பொருளாளர் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களது இல்லத்திற்கும் நேரில் சென்று கருணாஸ் MLA., நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம் 21.09.2020
நாகையில் துறைமுகப் போக்குவரத்து உருவானால் தொழில் வளம் பெருகும்! காணொளி கருத்தரங்கில் மு தமிமுன் அன்சாரி MLA உரை!
டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி வழி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18.09.2020 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை சமவெளியை தொழில் வளமாக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்புக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு ONGC, CPCL போன்ற மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் நமது மண்ணை சேர்ந்தவர்கள் குறைவானவர்களே பணிபுரிகிறார்கள். அந்த நிறுவங்கள் நமது இயற்கை வளங்களை வேட்டையாட முயலும் போது எதிர்ப்புகளை சந்திக்கின்றன. மீத்தேன் - ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுக்க பெரு நிறுவனங்கள் முயலும் போதும் மக்கள் எதிர்க்கிறார்கள். நமது நிலம், நீர், காற்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். அந்த வகையில் நமது இயற்கை வளங்களுக்கு பாதிப்பு இல்லாத தொழில்களை நாம் உருவாக்க வேண்டும். மதிப்பு கூட்டு வணிகங்களை ஊக்குவிக்க வேண்டும். நீண்ட கடல் வளம் உள்ளது. அதையும் பயன்படுத்த வேண்டும். நான் நாகைக்கு மருத்துவக் கல்லூரிக்கு குரல் கொடுத்தேன். அது கிடைத்திருக்கிறது. நாகைக்கு சட்டக்கல்லூரி, நாகூருக்கு மகளிர்