வி வி எஸ் எஃப் சி நடத்திய 20ஆம் ஆண்டு கால்பந்து போட்டி…!மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பரிசுகளை வழங்கினார்..!!


சிவகங்கை.செப்.22.,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாலிபர் விளையாட்டு சங்கம் சார்பில் 20-ஆம் ஆண்டு கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.

இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இப்போட்டியில் காரைக்குடி, பனைக்குளம், குப்பன்வலசை மற்றும் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

20.9.2020 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பனைக்குளம் அணியும், டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி அணியும் மோதின இப்போட்டியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்ற டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி அணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார் இரண்டாம் பரிசு பெற்ற பனைக்குளம் அணியினருக்கு சமூக ஆர்வலர் சித்திக் வெற்றிக் கோப்பையை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மஜக மாவட்டச் செயலாளர் சல்லை ஹாஜா, மருத்துவ சேவை அணி செயலாளர் முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWIING
#சிவகங்கை_மாவட்டம்
21-09-2020