மார்ச்.17,
கட்டிமேடு ஆதிரெங்கம் பகுதி பிராமண வகுப்பைச் சார்ந்தவர் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள கோவையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கே தேர்தல் காலமாக இருப்பதால் இரத்தம் ஏற்பாடு செய்ய முடியவில்லை முதற்கட்டமாக 20 யூனிட் இரத்தம் தேவை என்று கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை மஜக அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் ஊரில் இருந்தே கோவை KMC மருத்துவமனைக்கு இன்று சென்ற திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், ஆதிரெங்கம் கிளை செயலாளர் தௌபிக், கட்டிமேடு துணை செயலாளர்கள் யாசிர், முஜிபுர் ஒருங்கிணைப்பில் மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் சுமார் 15 யூனிட் இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
அழைத்து சென்ற 20 நபர்களில் ஐந்து நபர்களிடம் மருத்துவ காரணங்களுக்காக இரத்தம் எடுக்கவில்லை. மேலும் அதிக யூனிட் இரத்தம் தேவை உள்ளதாகவும் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இரத்தம் ஏற்பாடு செய்ய முடியாதபட்சத்தில் மீண்டும் ஊரிலிருந்து ஆட்களை அழைத்து செல்லும் முயற்சியில் மஜகவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.