
மார்ச்:17.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குன்னூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களின் அழைப்பின் பேரில் மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் கமாலுதீன்,அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் வேட்பாளர் அவர்கள் பேசும்போது குன்னூர், சட்டமன்றத் தொகுதியில் மஜக சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தங்களின் பணிகளைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன் வெற்றி பெற்றால் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்தி, மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ரகுமான், அப்துல் ஹமீத், ரிஸ்வான், பைரோஸ், தப்ரேஸ், குன்னூர் நகர செயலாளர் சாதிக், மற்றும் நகர, கிளை, நிர்வாகிகள் பங்கேற்றனர் .
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
17.03.2021