மு தமிமுன் அன்சாரி MLA ஏற்பாடு செய்த இணைய வழி தொழில் கருத்தரங்கம்!


செப்.24,

கொரோணா காரணமாக வேலையிழந்தவர்கள், வெளிநாடுகள், வெளிநகரங்களிலிருந்து தொகுதிக்கு திரும்பியவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த இணைய வழி கருத்தரங்கு நேற்று மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட தொழில் முகமை (DIC) பொது மேலாளர் திரு.P.S. கமல கண்ணன் அவர்களும், மாவட்ட கால்நடைதுறை இணை இயக்குனர் திருமதி. டாக்டர் A.சுமதி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

பிறகு கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான வாய்ப்புகள், சலுகைகள், வங்கி கடன்கள், மானியங்கள் குறித்து விளக்கப்பட்டது.

கொரோணா காலத்தில், இம் முயற்சி மக்களையும், அரசு திட்டங்களையும் இணைக்கும் ஒரு முயற்சி என மு.தமிமுன் அன்சாரி MLA கூறினார். இது போன்ற தொடர் காணொளி நிகழ்வுகளை நடத்த உள்ளதாகவும் கூறினார்.

நிகழ்வுக்கு MLA அவர்களின் தனிச்செயலாளர் நாகை முபாரக் அவர்கள் வரவேற்புரை வழங்க, MLA அலுவலக செயலாளர் சம்பத் குமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, இதில் பங்கேற்றவர்கள் கூறினர்.

தொகுதிக்கு அப்பாற்பட்டு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தொகுதிக்கு தொடர்புடைய வெளிநாடுகளில் வசிப்போரும் இதில் பங்கேற்றனர்.

அரசு திட்டங்கள் குறித்து மக்களுக்காக MLA அலுவலகம் சார்பில் தமிழகத்தில் நடைபெற்ற முதல் காணொளி நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.