தென்காசி : செப் 06., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், அவர்களின் தலைமையில் தென்காசி நகரம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி கிருமி நாசினி தெளித்தனர். இதில் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சிலம்பாட்ட சாகுல், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், ஒன்றிய மாணவர் இந்தியா செயலாளர் முஸ்தபா, நகர பொருளாளர் முகம்மது கனி, துணை செயலாளர் சேக் அலி, தொழிற்சங்க செயலாளர் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆம்ஷா பாசித், நகர மாணவர் இந்தியா செயலாளர் மாலிக், துணை செயலாளர் உமர் அலி, 10 வது வார்டு செயலாளர் பாசித் அஸாருதீன், 10 வது வார்டு மாணவர் இந்தியா செயலாளர் ரஷீத் அலி, ஆகியோர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 06.09.2020
Month:
புதியவர்களை கவர்ந்து ஈர்க்கும் மஜக!
செப்.06, நாகை மாவட்டம் பா.கோட்டூரில் இன்று மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையிலும் பொருளாளர் சதக்கத்துல்லாஹ் முன்னிலையிலும் நடைப்பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் திரளானோர் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கட்சியின் கொள்கை மற்றும் செயற்பாடுகளை விளக்கி மஜக அட்டைகளை கையளித்தார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச்செயலாளர் முன்ஷி யூசுப்தீன், IT WING துணைச் செயலாளர் நிசாத், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, குவைத் மண்டல துணைச்செயலாளர் பாசித் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கட்சியில் இணைத்து கொண்ட பெரும்பாலானோர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
மஜக மேலப்பாளையம் பகுதியில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!
நெல்லை.செப்.06., மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதி சார்பில் பகுதி செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. MJTS மாவட்டச் செயலாளர் நாகூர்மீரான் மற்றும் மேலப்பாளையம் நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மஜக நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி, நெல்லை பகுதி பொருளாளர் பீர், பகுதி துணை செயலாளர் அலாவுதீன், MJTS மேலப்பாளையம் நகர செயலாளர் மைதீன், MJTS பேட்டை நகர செயலாளர் ஹபிபுல்லாஹ், பேட்டை நகர பொருளாளர் அசன் கனி, துணை செயலாளர் சம்சு, பேட்டை நகர மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மேலப்பாளையம் பகுதியை சார்ந்த சுடலை, ரவி,
பயணிகள் நிழலகத்தைத் தூய்மைப்படுத்திய மஜக!
செப்.06, நாகை மாவட்டம் நடுக்கடை பேருந்து பயணிகள் நிழலகம் கட்டுமாவடி (புறாகிராமம்) ஊராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், பராமரிப்புகள் இன்றி அசுத்தமாகவும் இருந்ததால் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டக்கூடிய அபாயத்தை உணர்ந்து மஜகவினரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணிகள் கட்டுமாவடி ஊராட்சி பொறுப்பாளர் அபுபக்கர், கிளை ஒருங்கிணைப்பாளர் தௌஃபிக் மற்றும் மஜக செயல்வீரர்கள் பங்கேற்பில் செய்யப்பட்டது. தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
மஜகவில் தன்னெழுச்சியாக இணைந்த புறாகிராமம் இளைஞர்கள்!
செப்.05, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட புறாகிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் முன்னிலையில் தங்களை தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான் @ செய்யது அஹமது, திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் சதாம், புறாகிராமம்- கட்டுமாவடி ஊராட்சி பொறுப்பாளர் அபுபக்கர், திட்டச்சேரி நிர்வாகிகள் அய்யூப், சேக், சுல்தான், பைசல் ஆகியோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.