You are here

புதியவர்களை கவர்ந்து ஈர்க்கும் மஜக!


செப்.06,
நாகை மாவட்டம் பா.கோட்டூரில் இன்று மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையிலும் பொருளாளர் சதக்கத்துல்லாஹ் முன்னிலையிலும் நடைப்பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் திரளானோர் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கட்சியின் கொள்கை மற்றும் செயற்பாடுகளை விளக்கி மஜக அட்டைகளை கையளித்தார்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச்செயலாளர் முன்ஷி யூசுப்தீன், IT WING துணைச் செயலாளர் நிசாத், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, குவைத் மண்டல துணைச்செயலாளர் பாசித் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

கட்சியில் இணைத்து கொண்ட பெரும்பாலானோர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.

Top