You are here

பயணிகள் நிழலகத்தைத் தூய்மைப்படுத்திய மஜக!


செப்.06,
நாகை மாவட்டம் நடுக்கடை பேருந்து பயணிகள் நிழலகம் கட்டுமாவடி (புறாகிராமம்) ஊராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், பராமரிப்புகள் இன்றி அசுத்தமாகவும் இருந்ததால் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டக்கூடிய அபாயத்தை உணர்ந்து மஜகவினரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இப்பணிகள் கட்டுமாவடி ஊராட்சி பொறுப்பாளர் அபுபக்கர், கிளை ஒருங்கிணைப்பாளர் தௌஃபிக் மற்றும் மஜக செயல்வீரர்கள் பங்கேற்பில் செய்யப்பட்டது.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.

Top