கொரோனா நெருக்கடியில் பெரும் பாதிப்புகளை சந்தித்தவர்களில் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் அடங்குவர். உரிமையாளர்களின் வருவாய் இழப்பு ஒருபுறமெனில், இதை சார்ந்த தொழிலாளர்களின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது. ஒரு பேருந்தில் இரண்டு ஓட்டுனர்கள், இரண்டு பணியாளர்கள், கட்டணம் பதிவு செய்யும் ஏஜெண்டுகள் என கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனால் வாழ்வாதாரங்களை இழந்துள்ளதை அறிய முடியும். தனியார் ஆம்னி பேருந்துகளை இன்று முதல் இயக்கிட அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அவர்களால் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. செப்டம்பர் 30 வரை இவற்றை இயக்கிட வாய்ப்பில்லை என்றும் அவர்களது சங்கம் அறிவித்துள்ளது. இது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். 5 மாதங்கள் முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்காத நிலையில், அவர்களால் சாலை வரியை எப்படி செலுத்த இயலும்? தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் மட்டும் 25 முறை பெட்ரோல்-டீசல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இந்த நிலையில் தற்போது சமூக இடைவெளியுடன் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. எனவே 6 மாதங்களுக்கான சாலை வரியில் விலக்கு அளிப்பது, இன்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிப்பது என
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – நீலகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக ஜெ.சம்ரின் த/பெ: ஜெய்னுதீன் அலைப்பேசி: 8098657227 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 07-09-2020
மஜக தூத்துக்குடி வடக்கு மானங்காத்தான் புதிய கிளை உதயம்.!
செப்டம்பர்.07., தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தான் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை உதயமானது, நேற்று (07-09-2020) மஜக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் தாரிக் தலைமையில், கிளையை சேர்ந்த சதாம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மானங்காத்தான் கிளைக்கான நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு புதிய கிளை உதயமானதை வரவேற்று பேசினார், மேலும் புதிய கிளையின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது நஜிப், ராசுக்குட்டி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம் 06-09-2020
மஜக கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!
செப்டம்பர்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நவம்பர் மாதம் கன்னியாகுமரி தொகுதியில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சாதிக் அலி, முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷெரீப், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன் தாஸ், மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன், திருவை கிளை செயலாளர் மாலிக், துணைச் செயலாளர் பிரின்ஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 06-09-2020
சிதம்பரத்தில் மஜக கொடியேற்று விழா!
செப்.06, சிதம்பரம் பூதகேணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் புதுபிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.