செப்டம்பர்.07.,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தான் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை உதயமானது, நேற்று (07-09-2020) மஜக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் தாரிக் தலைமையில், கிளையை சேர்ந்த சதாம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மானங்காத்தான் கிளைக்கான நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு புதிய கிளை உதயமானதை வரவேற்று பேசினார், மேலும் புதிய கிளையின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது நஜிப், ராசுக்குட்டி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம்
06-09-2020