நெல்லை.செப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது, மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளை தூய்மைப்படுத்துவது, ஒருங்கிணைந்த இறைச்சிக் கடைகள் நடத்துவதை கைவிட்டு விட்டு அவரவர் இடங்களில் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கை மனுவை வழங்கினர். இந்நிகழ்வில் நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா, நெல்லை பகுதி செயலாளர் கலீல், பேட்டை நகர பொருளாளர் அசன்கனி, MJTS பேட்டை நகர பொருளாளர் ஹபிபுல்லாஹ், மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் ஆகியோர் மனுவை நேரில் வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 08-09-2020
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருவண்ணாமலை மாவட்ட துணைச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட துணைச்செயலாளராக, H.அமீர் கான் த/பெ; N.ஹைதர் கான் 37A/93 எல்லுக்கூட்டை தெரு திருவண்ணாமலை அலைபேசி; 9626077487 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 08-09-2020
தென்காசியில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த மஜகவினர்!
தென்காசி செப் 08., மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கவும் மற்றும் வடகரை பேரூர் கிளையின் அரசு மருத்துவமனைக்கு இயற்கை சுவாச கருவிகள் வழங்கிடவும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன் அவர்களின் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட பொருளாளர் M. S. S. முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை இனாயத்துல்லா மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் M. முகம்மது பஷீர், நகர செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் முகம்மது கனி ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 07.09.2020
பொள்ளாச்சி நகராட்சியின் மெத்தன போக்கால் ஏற்பட்ட உயிர்ப் பலி! இறந்தவருக்கு நீதி கேட்டு களத்தில் மஜகவினர்!!
பொள்ளாச்சி: செப்.07. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, மற்றும் சாலை பணிகள், நடைபெற்று வருகிறது. அரைகுறை பணிகளாலும், நகராட்சியின் மெத்தன போக்காலும், அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவருக்கு நீதி கேட்டு பொள்ளாச்சி நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு நகர செயலாளர் A.ராஜாஜெமீஷா, அவர்கள் தலைமையில் மார்க்கெட் ரோட்டில் மஜக வினரும் பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள், ஒன்று கூடினர். தகவலறிந்த காவல்துறையினர் மஜக வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசப்பட்டு ஒரு வார காலத்தில் சாலை பணிகளை விரைந்து முடித்து தருவதாக வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. மேலும் இது தொடர்பான புகார் மனு துணை ஆட்சியரிடமும், முறையாக சாலை பணிகளை செய்யாமல் உயிர் பலிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர். மேலும் விபத்தில் இறந்த சகோதரியின் குடும்பத்தாரை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு சட்ட ரீதியான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக மஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் K.U. முஸ்தபா, நகர பொருளாளர் முகம்மது பஷீர், நகர
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளராக, Dr. தினகர் B.H.M.S, 33/18, மூர்த்தி நிவாஸ், மெயின் ரோடு, ஈத்தாமொழி, கன்னியாகுமரி மாவட்டம், அலைபேசி: 9442130579 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 07-09-2020