பொள்ளாச்சி: செப்.07.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, மற்றும் சாலை பணிகள், நடைபெற்று வருகிறது.
அரைகுறை பணிகளாலும், நகராட்சியின் மெத்தன போக்காலும், அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவருக்கு நீதி கேட்டு பொள்ளாச்சி நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு நகர செயலாளர் A.ராஜாஜெமீஷா, அவர்கள் தலைமையில் மார்க்கெட் ரோட்டில் மஜக வினரும் பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள், ஒன்று கூடினர்.
தகவலறிந்த காவல்துறையினர் மஜக வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசப்பட்டு ஒரு வார காலத்தில் சாலை பணிகளை விரைந்து முடித்து தருவதாக வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இது தொடர்பான புகார் மனு துணை ஆட்சியரிடமும், முறையாக சாலை பணிகளை செய்யாமல் உயிர் பலிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர்.
மேலும் விபத்தில் இறந்த சகோதரியின் குடும்பத்தாரை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு சட்ட ரீதியான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக மஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் K.U. முஸ்தபா, நகர பொருளாளர் முகம்மது பஷீர், நகர துணைச் செயலாளர் அப்துல் காதர், நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், நகர இளைஞரணி பொருளாளர் முகம்மது இஸ்மாயில், நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹபீப் அன்சாரி, நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சௌகத், அபீப் ராஜா, மற்றும் ஒன்றிய, வார்டு, நிர்வாகிகள், மார்க்கெட் ரோடு வியாபாரிகள் பொதுமக்கள், என திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பொள்ளாச்சி_நகரம்
#கோவை_மாநகர்_மாவட்டம்
07/09/2020