ஆகஸ்ட்.19., வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பொறுப்பு ஆணையர் சிசில் தாமஸ் அவர்களிடம் அடிப்படை வசதி வேண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ்.அனீஸ் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது.. குடியாத்தம் நகரம் 8-வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைத்து வேண்டியும், குடியாத்தம் நகரம் 8- வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், பகுதிகளில் மழைக்காலத்தில் மழைநீர் வெள்ளம்போல் தேங்குகிறது அதனை சீர்செய்ய புதிய கழிவு நீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டியும், 36-வது வார்டு தங்கம் நகர் ராகவேந்திரா தெரு, கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டியும், குடியாத்தம் நகரத்தில் சுற்றியுள்ள 36-வார்டுகளிலும் மழைக்காலம் என்பதால் கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டியும். மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தாங்கள் நேரில் ஆய்வு பணிகள் செய்து, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் மாவட்டப் பொருளாளர் I.S.முனவ்வர் ஷரிப், 2-வார்டு கிளை செயலாளர் மஸ்தான், சக்தி நகர் சேர்ந்த மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 18.08.2020
Month:
நேரடி வேலை இழந்துள்ளோருக்கு உதவிடும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA
கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுக்க தினக்கூலிகளாக வாழும் மக்கள் வேலையிழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் 12.2 கோடி பேர் வேலை இவ்வாறு இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக, பல வகையிலும் அல்லல்பட்டு வரும் இவர்களுக்கு, மத்திய அரசு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு உதவித் தொகையை அவர்களின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு தொண்டு இயக்கங்களை பிரதிபலிக்கும் "தமிழ்நாடு அலையன்ஸ்" சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உழைப்பாளிகளின் உரிமைகளை முன்னிறுத்தி,ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை இக் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (தொடர்புக்கு.. 9444976932, 72004 81878) இதற்கு தகுதியானவர்களை ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, அமைப்பு சார நல வாரியங்களின் தரவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும் என்ற இவர்களது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. இக்கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிப்பதோடு, அனைவரும் இதற்கு ஆதரவாக கையெழுத்திட்டு இக்கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 19.08.2020
ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்று நெல்லை மஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.!
நெல்லை.ஆக.18., ஸ்டெர்லைட் ஆலை குறித்தான இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலாளர் கரிசல் சுரேஷ், மஜக மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா, பேட்டை நகரச் செயலாளர் இரா.முத்துக்குமார், பொருளாளர் அசன் கனி, துணைச் செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர், தொழிற்சங்க செயலாளர் ஹபிபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தீர்ப்பிற்க்கு மகிழ்ச்சி தெரிவித்த மஜக-வினர், நெல்லையின் நீர்வளத்தை சுரண்டும் அயல்நாட்டின் குளிர்பான தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்க கோரிக்கை வைத்தனர். தகவல் #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லைமாவட்டம் 18-08-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – கன்னியாகுமரி மாவட்ட அணி நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட அணி நிர்வாகிகளாக, விவசாய அணி மாவட்டச் செயலாளராக, D.K.ராஜேஸ்வரன் தாஸ் த/பெ; S.தர்மகன் கற்காடு காலனி, சுசீந்தரம், கன்னியாகுமரி அலைபேசி; 9944094675 மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாவட்டச் செயலாளராக, M. ஷெரிப் த/பெ; முஹம்மது ஹனீபா 113A, லாசர் காம்பௌண்ட் பாலத்தெரு, புதுக்குடியிருப்பு, வடசேரி, நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் அலைபேசி; 9894533249 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 18-08-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – நெல்லை மாவட்டத்தின், மாவட்ட துணை செயளாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டத்தின், மாவட்ட துணை செயளாளராக R.முஹம்மது முஸ்தாக் த /பெ; M.H.ரசூல்தீன் ஏர்வாடி. அலைபேசி; 9087767002. நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 18-08-2020 https://m.facebook.com/story.php?story_fbid=2707284352704656&id=700424783390633