ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்று நெல்லை மஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.!


நெல்லை.ஆக.18.,

ஸ்டெர்லைட் ஆலை குறித்தான இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலாளர் கரிசல் சுரேஷ், மஜக மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா, பேட்டை நகரச் செயலாளர் இரா.முத்துக்குமார், பொருளாளர் அசன் கனி, துணைச் செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர், தொழிற்சங்க செயலாளர் ஹபிபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தீர்ப்பிற்க்கு மகிழ்ச்சி தெரிவித்த மஜக-வினர், நெல்லையின் நீர்வளத்தை சுரண்டும் அயல்நாட்டின் குளிர்பான தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்க கோரிக்கை வைத்தனர்.

தகவல்
#மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
18-08-2020