கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் நூறு நாள் வேலை திட்டத்திற்கும், காய்கறி கடைகளுக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. ஆன்லைன் வகுப்புகளை இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் நடத்தும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்கள் 70 முதல் 90 சதவீதம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. இந்நிலையில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு ஊதியத்தை கூட பல தனியார் பள்ளிக்கூடங்களில் வழங்கப் படுவதில்லை என்ற செய்தி கவலையளிக்கிறது. எனவே இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் கவனம் எடுத்து தனியார் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஊதியத்தை உரிய சதவீதத்தில் உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 27.08.2020
Month:
MKP அமீரக செயற்குழு கூட்டம்!
ஆக.26., மனிதநேய கலாச்சார பேரவையின் ஐக்கிய அரபு அமீரக செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக மண்டல பொருளாளர் H.அபுல்ஹசன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அமீரக ஆலோசகர் மதுக்கூர் அப்துல் காதர், அவர்கள் முன்னிலை வகிக்க அமீரக செயலாளர் அசாலி அஹமது, அவர்கள் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மனிதநேய கலாச்சார பேரவையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் அப்துல் ரஜாக், ஜியாவுல் ஹக், முஹம்மது தைய்யூப், ரஹ்மதுல்லாஹ், அடியற்கை யூசுப்தீன், ஹம்தான், சேக்தாவுது, அதிரை அஸ்ரப்அலி, பூதமங்கலம் ஜாகிர் உசேன், எலந்தங்குடி முகமதுயூசுப், கட்டிமேடு ஜாஹீர் உசேன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல். #தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #அமீரக_மண்டலம் 23.08.2020
மஜக தஞ்சை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!
தஞ்சை.ஆகஸ்ட்.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தகர் அணி செயலாளர் யூசுப் ராஜா அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் விரைவில் மாவட்ட அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்டப் பொருளாளர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, முஹம்மது இப்ராஹிம், சையது இப்ராஹிம், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் ஜஹாங்கிர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அல்லாபக்ஸ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் உபைஸ் கரீம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 25-08-2020
மஜக தலைமையக நியமன அறிவிப்ப – இராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளராக, சா.முஹம்மது முஸம்மில் த/பெ; மு.சாகுல் ஹமீது அலைப்பேசி; 8870578987 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 25-08-2020
திரையரங்க தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மஜகவினர்.!
நெல்லை.ஆக.25., கொரோனா நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள திரையரங்க தொழிலாளர்களை கண்டறிந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) நெல்லை மாவட்டம் சார்பாக நிவாரண பொருட்கள் முதற்கட்டமாக வழங்கினர். இந்நிகழ்விற்கு மஜக மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா தலைமை தாங்கினார், MJTS மாவட்டச் செயலாளர் நாகூர்மீரான், MJTS பேட்டை நகர செயலாளர் ஹபிபுல்லாஹ், MJTS மேலப்பாளைய நகர செயலாளர் A1 மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் நெல்லை பகுதி செயலாளர் கலீல், பேட்டை நகர செயலாளர் இரா.முத்துக்குமார், பேட்டை நகர பொருளாளர் அசன்கனி, பேட்டை நகர துணை செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர், சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். நிவாரண பொருட்கள் பெற்ற திரையரங்க தொழிலாளர்கள் தங்களை யாருமே கண்டுகொள்ளாத சூழலில் மனிதநேய ஜனநாயக கட்சி எங்களுக்கு உதவியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தங்களது நன்றியை தெரிவித்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லைமாவட்டம் 25-08-2020