தஞ்சை.ஆகஸ்ட்.26.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தகர் அணி செயலாளர் யூசுப் ராஜா அவர்கள் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் விரைவில் மாவட்ட அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்டப் பொருளாளர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, முஹம்மது இப்ராஹிம், சையது இப்ராஹிம், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் ஜஹாங்கிர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அல்லாபக்ஸ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் உபைஸ் கரீம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
25-08-2020